domingo, 19 de febrero de 2012

நான் ரசித்த வைரமுத்துவின் பாடல் வரிகள்

முதல்வன் பட பாடல் வரிகள்-

சூரியன  ரெண்டு துண்டு 
செஞ்சு  கண்ணில்  கொண்டவளோ  ஆஹா ஓஓ
சந்திரன  கள்ளுக்குள்ள 
ஊற  வச்ச  பெண்ணிவளோ  ஆஹா ஓஓ
நீராக நானிருந்தால் உன்
நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில்
குதிச்சு அங்கு குடியிருப்பேன்

ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுக துளைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே
             ################################################
ஜீன்ஸ் பட பாடல் வரிகள்-

பெண்ணே உனது மெல்லிடை பாத்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்தி போனேன்
ஆஆஆ அவனே வள்ளலடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து
என்னை வதைப்பது கொடுமையடி

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா 
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி
அங்கெ உனக்கொரு வீடு  செய்வேன்
உன் உயிர் காக்க என் உயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறை இடுவேன் 
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்கென்றே
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தமென்றே நான் குடிப்பேன்
               #######################################
சிவாஜி  பட பாடல் வரிகள்

தலை முதல் கால் வரை தவிக்கின்ற
தூரத்தை இதழ்களில் கடந்து விடு
உன் மீசையின் முடி என்ற மெல்லிய
சாவியில் குலன்களில் திறந்து விடு 

ஒரு வெண்ணிலவை மணக்கும்
மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாரும் இல்லை
இதோ இதோ இவள் தான்
                 ############################################
தாளம் பட பாடல் வரிகள்-

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெய்யில் தார் ஒழுகும் நகர  வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித்  துருவி உனை தேடுதே
உடையும் உரைகளிலும் தொலைந்த
காதலனை உருகி உருகி மனம் தேடுதே

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பமது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேக்குதே

பாறையில் செய்தது என் மனம் என்று 
தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்
                                ###############################
புதிய முகம் பாடல் வரிகள்-

இந்த படத்தில் வரும் கண்ணுக்கு மை அழகு என்ற பாடலில் வரும் அத்தனை வரிகளும் மிகச் சிறந்தவை 

கள்வர்க்கு இரவழகு
காதலர்க்கு நிலவழகு
விடிகாலை விண்ணழகு
விடியும் வரை பெண்ணழகு

கடவுள் இல்லை என்றேன்
தாயைக் காணும் வரை
கனவு இல்லை என்றேன்
ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன்
உன்னைக் காணும் வரை
வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்
வார்த்தை இல்லாமலே பாசை உண்டாகலாம்
காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா
                        ##################################
பம்பாய் பட பாடல் வரிகள்-

ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டு கொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டு கொண்டேன்
என்னை மறந்து விட்டேன்
இந்த உலகத்தில் நான் இல்லை நான் இல்லை
உன்னை மறந்து விட்டால்
எந்த மலரிலும் தேன் இல்லை தேன் இல்லை
இது கனவா இல்லை நினைவா
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்

மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன் 

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி தந்த போது 
மறு கண்ணும் தூங்கிடுமா  
        ######################################
ரோஜா பட பாடல் வரிகள்-

கண்ணுக்குள் நீதான் கண் நீரில்  நீதான்
கண் மூடிப் பார்த்தால் கண்ணுக்குள் நீதான்
தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்னப் பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்

வாய் இல்லாமல் போனால்
வார்த்தை இல்லை கண்ணே
நீ இல்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே

பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூக் கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப் பூப்பதில்லை

நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ                                                                  (இன்னும் இருக்கு)
            ################################################
தங்கத்தைப் பூட்டி வைத்தாய்
வைரத்தைப் பூட்டி வைத்தாய்
உயிரைப் பூட்ட ஏது பூட்டு
குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கு
சுகமாய் இருப்பவர் யார் காட்டு

இந்த பூமி சமம் நமக்கு
நம் தெருவுக்குள் ஜாதிச் சண்டை
மதச் சண்டை வம்பெதற்கு 
                                                            இப்படியான மிகச்சிறந்த தத்துவ வரிகளையும் அவர் எழுதியுள்ளார் என்றாலும் வைரமுத்து என்றவுடன் அவருடைய காதல் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன(அதற்கு என் வயசும் ஒரு காரணமாக இருக்கலாம்) அடுத்த பதிவில் அவருடைய தத்துவ வரிகளை எழுதுகிறேன்.

த.ஸ்ரீதர்

No hay comentarios:

Publicar un comentario